பேஸ்புக் இமெயில் சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் இணைய ராஜாவான கூகுலின் ஜிமெயில் சேவையோடு மல்லுக்கட்ட தயாராகி உள்ள பேஸ்புக் மற்றொரு வகையிலும் கூகுலுக்கு எதிராக வியூகம் வகுத்துள்ளது.அதாவது பேஸ்புக் தனது பயனாளிகளை பேஸ்புக்கை அவர்களின் முகப்பு பக்கமாக வைத்து கொள்ள கோரி வருகிறது.இதற்காக பிரத்யேக பட்டன் ஒன்றையும் அறிமுகம்செய்துள்ளது.
தற்போது பெரும்பாலானோர் கூகுலையே முகப்பு பக்கமாக வைத்துள்ளனர்.அல்லது பலரும் முதலில் விஜயம் செய்யும் பக்கம் கூகுலாகவே இருக்கிறது.கூகுலின் சிறப்பான தேடல் சேவையே இதற்கு காரணம்.ஆனால் பேஸ்புக் இதனை மாற்ற விரும்புகிறது. பேஸ்புக்கிலும் தேடல் வசதி உண்டு.அதோடு சமூக வலைப்பின்னல் சார்ந்த தேடலே எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்கின்றனர்.எனவே இணையத்தின் சக்தி வாய்ந்த தளம் என்னும் பெருமையை கூகுலிடம் இருந்து தட்டிப்பறிக்க பேஸ்புக் காய்களை நகர்த்துகிறது.
0 comments:
Post a Comment